Wednesday 12 September 2018

ஈரோட்டில் கராத்தே கருப்பு பட்டை வழங்கும் விழா நடந்தது

ஈரோட்டில்  கராத்தே கருப்பு பட்டை 
வழங்கும் விழா நடந்தது
         
ஈரோடு மாவட்ட ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கராத்தே கருப்பு பெல்ட்கான திரணாய்வு போட்டி   ஈரோடு வீரப்பன் சந்திரம் விநாயகா வித்யா பவன் பள்ளியில் நடந்தது ,இதில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்,
        இந்த போட்டியை தென்னிந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் கே.லட்சி நடுவராக செயல்பட்டு மாணவ மாணவிளை தேர்வு செய்தார் ,இதை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது ,விழாவிற்கு ஈரோடு மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளி சங்க தலைவர் பி.சந்திரசேகரன் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகலுக்கு சான்றிதழ்களையும் பெல்ட்களையும் வழங்கி பாராட்டி பேசினார், தேர்வு பெற்ற எஸ்.சசிதர்,வி.பரத்,எஸ்.சந்ரு,ஆர்,சஞ்சய்,ஆர்,அசோக்,ஆர்,விக்ரம்,
ஆர்,சுவாதி,என்.சோபனா,எம்.லோகபிரியா, ஆகியோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது,

               விழாவில் கராத்தே பயிற்சியாளர்கள் பி.பாலச்சந்திரன், எஸ் இளையராஜா, எ.ஆனந்தசாமி, சி,நந்தகுமார், எஸ் .தினேஷ், ஆர்.அஜய், யு.அறிவழகன், வி.சதீஸ்,வி.கார்த்திக்,ஆகியோர் கலந்துகொண்டனர், முடிவில் எஸ்.இளையராஜா நன்றி கூறினார் ,

   இத்தகவலை மாநில தலைமை பயிற்சியாளர் மற்றும், ஈரோடு மாவட்ட ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் செயளாளர் பி.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment